கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி என ஹாட்ரிக் வெற்றியை ருசித்த அன்னை இல்லத்து வாரிசு விக்ரம் பிரபுவின் அடுத்த வெற்றியாக சிகரம் தொடு செப்டம்பர் 12ந் தேதி வெளியாகி 50 நாட்களை தொட்டிருக்கிறது. மற்ற 3 படங்களின் அளவுக்கு இல்லையென்றாலும் தயாரிப்பாளருக்கு லாபத்தை தந்த வகையில் வெற்றிப் படம்தான்.
எஸ்கேப், சாந்தி, பிவிஆர், லக்ஸ் வளாகங்களில் ஷோ நேரத்தை தெரிந்து கொண்டு சென்றால் சிகரத்தை தொட்டு பார்க்கலாம். மற்ற செண்டர்களில் செகண்ட் ஷிப்ட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தை கவுரவ் இயக்கி இருந்தார், இமான் இசை அமைத்திருந்தார். விஜய் உலகநாதன் ஒளிப்பதிவு செய்திருந்தார். மோனல் கஜ்ஜார் ஹீரோயின்.
50 நாட்களுடன் சிகரத்தின் ஓட்டம் முடிவுக்கு வருகிறது. ஒரு வேளை அன்னை இல்லத்தின் சொந்த தியேட்டரான சாந்தியில் 100 நாள் வரைக்கும் ஓடலாம் அல்லது ஓட்டலாம்.