கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
தனது அழகிய துள்ளல் நடிப்பால் குறுகிய காலத்திலேயே பாலிவுட்டில் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்த ஆலியாபட்டிற்கு மவுசு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே விகாஸ் பாஹ் இயக்கும் ஷந்தார் படத்தில் ஹாகிப் கபூருக்கு ஜோடியாகவும், அயன் முகர்ஜி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார் ஆலியா பட். தற்போது, மேலும் ஒரு ரீ மேக் படத்தில் நடிக்க ஆலியாபட்டிற்கு அழைப்பு வந்திருக்கிறதாம்.
ராக் ஒன் 2 என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஆலியா வெயிட்டான ரோலில் நடிக்கிறாராம். 2008ம் ஆண்டு பரன் அக்தர், அர்ஜூன் ராம்பால் இணைந்து நடித்து மிகப் பெரிய வெற்றி பெற்ற ராக் ஒன் படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்த ராக் ஒன் 2 படமாம். அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்கும் இந்த படத்தில் நடிக்க ஆலியா பட் ஒத்துக் கொண்டுள்ளாராம். முதலில் இந்த படத்தை அபிஷேக் கபூர் இயக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது புது இயக்குநர் ஒருவர் தான் இந்த படத்தை இயக்க உள்ளதாகவும், மற்ற நடிகர் நடிகைகள் குறித்த தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.