'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
யுடிவி தயாரித்த நான் சிகப்பு மனிதன் படம் தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. ஆனால் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஆந்திராவில் வெளியிடப்பட்டபோது அங்கே மிகப்பெரும் வெற்றியடைந்தது.
யுடிவிக்கும் ஆந்திராவுக்கும் அப்படி என்ன ராசியோ தெரியவில்லை.
யுடிவி தயாரிப்பில் விக்ரம் பிரபு நடிப்பில் அண்மையில் வெளியான சிகரம்தொடு படம் தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.
அப்படியும் சிகரம் தொடு படத்துக்கு ஆந்திராவில் கிராக்கி ஏற்பட்டிருப்பதுதான் ஆச்சர்யம்.
கௌரவ் இயக்கிய இப்படத்தை சமீபத்தில் நடிகர் நாகார்ஜுனாவும் அவரது மகனும், நடிகருமான நாகசைதன்யாவும் பார்த்திருக்கிறார்கள்.
இருவருக்கும் சிகரம் தொடு படம் மிகவும் பிடித்து விட்டதாம். இதனால் சிகரம் தொடு படத்தை தெலுங்கில் ரீ-மேக் செய்ய முடிவு செய்துள்ளனர்.
விக்ரம் பிரபு நடித்த வேடத்தில் நாகசைதன்யாவும் சத்யராஜ் நடித்த வேடத்தில் நாகார்ஜுனாவும் நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
சிகரம் தொடு படத்தின் தெலுங்கு ரீமேக்கை கௌரவ் இயக்குவார் என்றும் கேள்வி.
இது சம்பந்தமான அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது!