மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பேங் பேங் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ஹிருத்திக் ரோஷன் மொகஞ்சதரோ என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை அசுதோஸ் கெளரிகர் இயக்குகிறார். முகமூடி படத்தின் ஹீரோயின் பூஜா, முதன்முறையாக பாலிவுட் படத்தில், அதுவும் முதல்படத்திலேயே ஹிருத்திக் ரோஷன் உடன் நடிக்கும் வாய்ப்பை பெற்று இருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வந்த நிலையில், ஹிருத்திக்கிற்கு கையில் அடிபட்டுள்ளது, இதனால் அவரால் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இப்படத்தில் நிறைய சண்டைக்காட்சிகள் இருப்பதால், அதையெல்லாம் சரியாக எடுக்க வேண்டும் என்று இயக்குநர் நினைக்கிறார், தற்போதைய சூழலில் ஹிருத்திக்கிற்கு கையில் அடிபட்டுள்ளதால் இப்போது சண்டைக்காட்சிகளை படமாக்கினால் அது சரியாக வராது என்ற காரணத்தினால், படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளனர் மொகஞ்சதரோ படக்குழுவினர்.