மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
விஜய் நடித்த கத்தி படம் தீபாவளி அன்று ரிலீசானது. அன்றைய தினம் விஜய் ரசிகர்கள் தியேட்டர்களை திருவிழாவாக கொண்டாடினார்கள். கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். அங்குள்ள வடக்கன்சேரி என்ற ஊரைச் சேர்ந்த உன்னி கிருஷ்ணன் என்ற ரசிகர் விஜய் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தபோது தவறி விழுந்து இறந்தார். கத்தி படத்தின் வெற்றி விழாவுக்காக கோவை சென்றிருந்த விஜய். அங்கு உன்னி கிருஷ்ணன் குடும்பத்தினரை வரவழைத்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அதோடு மூன்று லட்சம் ரூபாயை குடும்ப நிதியாக வழங்கினார். "உன்னி கிருஷ்ணன் உயிரோடு இருந்தால் உங்களுக்கு என்ன செய்வாரோ அதை நான் செய்கிறேன்" என்று அவர்களுக்கு ஆறுதல் கூறி அனுப்பினார்.