தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர், தற்போது சூரஜ் பர்ஜத்யா இயக்கத்தில், சல்மான் கான் உடன், ''பிரேம் ரத்தன் தன் பயோ'' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பொதுவாக ஸ்வரா பாஸ்கருக்கு ஒவ்வொரு வருடமும் தீபாவளியை தனது குடும்பத்தாருடன் கொண்டாட முடியாத சூழலே இருந்து வந்தது. தீபாவளி சமயத்தில் அவர் எப்போதும் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பார். இந்த வருடமும் அதேப்போன்று ஒரு சூழல் தான் இருந்தது. இந்நிலையில், தீபாவளியை ஒட்டி பிரேம் ரத்தன் தன் பயோ படக்குழுவுக்கு இரண்டு நாள் விடுமுறை விடப்பட்டு இருந்தது. அதனால் உற்சாகமான ஸ்வரா, நீண்ட வருடங்களுக்கு பிறகு தனது குடும்பத்தாருடன் தீபாவளியை கொண்டாடி, குடும்பத்தாரையும் ஆச்சர்யம் ப்ளஸ் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார்.