நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
ஷாரூக்கானின், ''ஹேப்பி நியூ இயர்'' படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்த அபிஷேக் பச்சன், இப்போது அடுத்தப்படியாக ஒரு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அது அபிஷேக் சர்மா இயக்கி வரும் ''ஷாக்கீன்ஸ்'' படம். அனு கபூர், அனுபம் கெர், பியூஸ் மிஸ்ரா, லிசா ஹைடன் ஆகியோர் நடித்து வரும் இப்படத்தில், அக்ஷ்ய் குமார் ஹீரோவாகவே சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது அபிஷேக் பச்சனும் ஒரு சிறப்பு தோற்றத்தில் வருகிறார். சமீபத்தில் தான் இவர் சம்பந்தப்பட்ட காட்சியை படமாக்கியுள்ளனர்.
இதுகுறித்து இயக்குநர் அபிஷேக் சர்மா கூறுகையில், இயல்பாகவே நடிகர் அபிஷேக் பச்சன் நகைச்சுவை உணர்வு உடையவர் என்று நான் ஏற்கனவே கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அதை இப்போது தான் நேரில் பார்த்தேன். அவரது நகைச்சுவையை பார்த்து இயக்குநரான நானே என்னை கட்டுப்படுத்த முடியவில்லை. அப்போது இருந்து அவரது தீவிர ரசிகனாக நான் மாறிவிட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் இருந்த சமயம் ஒரே கலகலப்பாக இருந்தது, அது மறக்க முடியாத தருணம் என்று கூறியுள்ளார்.
ஷாக்கீன்ஸ் படம் நவம்பர் 7ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.