டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தர்மேஷ் தர்சன் இயக்கத்தில், 2000-ல் வெளியான படம் ''தட்கன்''. அக்ஷ்ய் குமார், ஷில்பா ஷெட்டி, சுனில் ஷெட்டி ஆகியோர் இப்படத்தில் நடித்து இருந்தனர். இந்நிலையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இரண்டாம் பாகத்தை தற்போது விக்ரம் பட் இயக்க இருக்கிறார். தயாரிப்பாளர் ரத்தன் ஜெயின், விக்ரம் பட்டை அணுகி தட்கன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும்படி கேட்டுகொண்டார். அதன்படி தற்போது தட்கன் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் விக்ரம் பட். இப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை, அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாக இருக்கிறது.