‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஸ்ரீகாந்த, சுனைனா நடித்து கணேஷா இயக்கத்தில் நவம்பர் மாதம் வெளிவர உள்ள படம் நம்பியார். வழக்கமாக பல படங்களில் கதை சொல்லும் போது இது ரொம்ப வித்யாசமான கதை என்று இயக்குனர் சொல்வார், ஆனால் இந்த இயக்குனரிடம் கதை கேட்ட பிறகு இந்த படம் கொஞ்சம் வித்யாசமான கதை உள்ள படம் தான் என்பதை உணர முடிகிறது. காமெடி கலந்த சைக்காலஜி ட்ரீட்மென்ட் இந்த படம் என்று சொல்லலாம். ஒவ்வொருதற்குள்ளும் ஒரு கெட்ட புத்தி அப்பப்ப வந்து எட்டி பாக்கும், நல்ல மனிதன் செய்யும் எந்த வேலைக்கு பின்னாடியும் அந்த கெட்ட புத்தி எதோ ஒரு வகையில் தடுக்கும் அல்லது குறுக்கு வழி சொல்லும். இப்படி ஒரு கெட்ட புத்தி உள்ள கேரக்டருக்கு, ஒரு உருவம் அமைத்து படத்தில் ஒரு ரோல் ஆக்கி, அதுக்கு நம்பியார்னு பேர் வச்சா அந்த கதை எவ்ளோ வித்யாசமா இருக்கும் என்று யோசித்து பாருங்க.
படத்தில் பல விஷயங்கள் இருக்கு. ஸ்ரீகாந்த் பேர் ராமசந்திரன், சுனைனா பேர் சரோஜா தேவி, சந்தானம் பேர் நம்பியார். இப்படத்தில் விழுந்து சிரிக்கவும், விழி மூடாமல் பார்க்கவும் அவ்ளோ விஷயங்கள் இருக்குனு சொல்றார் கணேஷா. படத்தின் முக்கிய ஹைலைட்டே, ஸ்ரீகாந்த் பேசும் டயலாக்கை படத்தில் பத்து நிமிஷம் சந்தானம் பேசுறாராம் இன்னும் இப்படி பல சுவாரசியங்கள் தெரிஞ்சுக்க ரசிகர்கள் தியேட்டர் போய் படத்தை பாருங்க.