Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாரதிராஜாவுக்கு அமெரிக்க தமிழ்ச் சங்க விருது

27 அக், 2014 - 15:04 IST
எழுத்தின் அளவு:

நியூயார்க் நகரில் அமெரிக்க தமிழ் சங்கம் நடத்திய விழாவில் இயக்குனர் பாரதி ராஜாவுக்கு அமெரிக்க அரசின் உயரிய விருது வழங்கபட்டது.

பாரதிராஜாவுக்கு அமெரிக்காவின் நாஸ்சவ் கவுன்டி மேயர் எட்வர்ட் மங்கனோ வழங்கிய விருதில் பாரதி ராஜா தமிழ் பட உலகில் சகாப்தம் படைத்தவர் என்று புகழாரம் சூட்டப்பட்டது


தமிழ் பட இயக்குனர்கள் ஒரு காலகட்டத்தில் வெளி நாடு சென்று பட பிடிப்பு செய்த போது இவர் யாரும் பார்த்திராத அருகே உள்ள கிராமத்தை மக்களுக்கு அறிமுகம் செய்தார்


தன் சாதனைகளுக்காக மத்திய அரசின் பத்மா ஸ்ரீ மற்றும் பல தேசிய விருதுகளை பெற்றவர்; காதல் கதைகளையும் சமூக சிந்தனை உள்ள திரை படங்களை டைரக்ட் செய்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் என்று பாராட்டியது.


விழாவில் சிறப்புரை ஆற்றிய பாரதி ராஜா சர்வதேச அளவில் புலம் பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பு அளப்பரியது என்றார், திருமணம் ஆகி புகுந்த வீடு செல்லும் மணப்பெண் பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் நல்ல பெயர் எடுப்பதை போல் புலம் பெயர்ந்த தமிழர்கள் உள்ளனர் என்றார். தான் கடந்து வந்த பாதையை நினைவு கூர்ந்த டைரக்டர், தனது தாயின் ஆதரவும் ஆசியும் தான் வெற்றிக்கு காரணம் என்றார். தமிழர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களின் மூளை போற்றப்படும் என்றும் உலகின் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் பெரும் பதவி மற்றும் பொறுப்புகளை அலங்கரிக்க இதுவே காரணம் என்றார்.


சென்னையில் இருந்து காணொளி மூலம் அமெரிக்க சங்க தலைவர் முனைவர் பிரகாஷ் எம் ஸ்வாமி பாரதி ராஜா வின் சாதனைகளை பாராட்டினார். அமெரிக்காவில் உள்ள மதுரை மருத்துவ கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் மருத்துவர் சுந்தர் செல்வராஜ் மற்றும் மருத்துவர் மதன் ராஜ் வாழ்த்துரை வழங்கினார்கள்.


விழாவில் அமெரிக்க தமிழ் சங்கம் சார்பாக தமிழ் ரத்னா விருது வழங்க பட்டது. கவிஞர் அருள் வீரப்பன், எட்கர் ரொசாரியோ, ரமேஷ் ராமநாதன் வாழ்த்தினார்கள்.


அமெரிக்க தமிழ் சங்க துணை செயலர் வீரா குமார் நியூ ஜெர்சி தமிழ் சங்க வெள்ளி விழாவில் கலந்து கொள்ள வந்த டைரக்டர் நியூ யார்க் வந்ததற்கு காரணம் அவரின் ரசிகர்கள் மீதான பாசமே காரணம் என்றார்.


சங்க பொருளாளர் கோஷி ஊமன் டைரக்டர்க்கு பொன்னாடை போர்த்தினார்.சங்க செயலர் ஜெயா சுந்தரம் வரவேற்புரை வழங்க துணை தலைவர் கலை சந்திரா நன்றி கூறினார். விழாவில் தீபாவளியை முன்னிட்டு வந்த விருந்தினர்கள் அனைவர்க்கும் இனிப்புகள் வழங்கபட்டன. டைரக்டர் உடன் புகை படம் எடுத்து கொள்ள வந்த ரசிகர்கள் ஆவலாக இருந்தனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in