பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட் சினிமாவில் சுமார் 40 ஆண்டுகாலமாக இருந்து வருபவர் மெகாஸ்டார் அமிதாப் பச்சன். இப்போதும், தனக்கேற்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது தனுஷ் உடன் ஷமிதாப், பர்கான் உடன் வசீர் மற்றும் பிக்கு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர சின்னத்திரையில் குரோர்பதி நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகிறார். நடிகர் அமிதாப் ரசிகர்களுடன் எப்போதும் இணக்கமாக இருப்பார். அதிலும் இன்றைய நவநாகரீக டெக்னாலஜியான பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற வலைதளங்களிலும் அமிதாப் இருக்கிறார். தன்னைபற்றியும், தனது படங்கள் பற்றியும் ரசிகர்களுக்கு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் அமிதாப்பை, 11 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்களாம்.
இதுகுறித்து அமிதாப், தீபாவளி தினத்தன்று தனது டுவிட்டர் பக்கத்தில், ''எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். தற்போது என்னை 11 மில்லியன் பேர் பாலோ-அப் செய்கிறார்கள், ரசகிர்களுக்கு என் நன்றி'' என கூறியுள்ளார்.