அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் பூர்ணா. அதன் பின் “கந்தகோட்டை, துரோகி, வித்தகன், ஜன்னல் ஓரம், தகராறு” போன்ற படங்களில் நாயகியாக நடித்திருந்தாலும் இன்னும் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பெறாமலே இருக்கிறார். தற்போது கூட “அர்ஜுனன் காதலி, படம் பேசும், அப்பா டக்கர்” ஆகிய தமிழ்ப் படங்களிலும், சில தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். தென்னிந்திய மொழிப் படங்கள் அனைத்திலும் நடித்து தென்னிந்திய நடிகை என்று பெயர் பெற்றாலும் அவரால் ஏனோ இன்னும் முன்னணி ஹீரோயின் என பெயர் எடுக்க முடியாமலே உள்ளது.
இதனிடையே, கடந்த சில வாரங்களாகவே பூர்ணாவின் திருமணம் பற்றிய செய்திகள் பரபரப்பாக வெளியாகி வருகின்றன. அவர் விரைவில் துபாய் தொழிலதிபர் ஒருவரை மணக்கப் போவதாகவும் செய்திகள் வந்தன. ஆனால், அவற்றையெல்லாம் பூர்ணா மறுக்கிறார். “நான் திருமணம் செய்து கொள்ளும் போது கண்டிப்பாக அனைவருக்கும் தெரிவிப்பேன். ஆனால், ரகசியமாக திருமணம் செய்து கொள்ள மாட்டேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
பூர்ணா நடிக்க வந்து ஏறக்குறைய பத்து ஆண்டுகள் ஆகிவிட்டதால் அவரைப் பிடிக்காத யாரோதான் இப்படி ஒரு வதந்தியைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.