‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
மலையாளத்தில் மோகன்லால் நடித்து வெளிவந்து சூப்பர்ஹிட்டான த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசத்தின் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் கமல், சமீபத்தில் மோகன்லால் எழுதிய பயணங்கள் பற்றிய புத்தகத்தை வெளியிட்டுள்ளார். தனது சூட்டிற்கிற்கு இடையே தனது நண்பரான மோகன்லாலிற்காக இந்த விழாவில் கமல் கலந்து கொண்டாராம்.
தனது பயண அனுபவங்கள் பற்றி நடிகர் மோகன்லால் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். மோகன்லாலின்டே யாத்ரகள் என பெயரிடப்பட்டுள்ள இந்த புத்தக வெளியீட்டு விழா கொச்சியில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட கமல், மோகன்லாலின் நண்பர் என்ற முறையில் இந்த விழாவிற்கு வந்துள்ளதாக தெரிவித்தார். இவ்விழாவில் டைரக்டர் பிரியதர்ஷன் மற்றும் மனோஜ் ரவி ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.