ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தீபாவளிக்கு வெளியான ஷாருக்கானின் ஹேப்பி நியூ இயர் படம், மிக விரைவாக 100 கோடியை வசூலித்த பாலிவுட் படங்களின் கிளப்பில் இணைந்துள்ளது. அக்டோபர் 24ம் தேதி ரிலீசான இந்த படத்தின் வசூல் அக்டோபர் 25ம் தேதி வரை 82.67 கோடியை எட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
ஹேப்பி நியூ இயர் படத்தின் வசூல் பற்றி ரெட் சில்லிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், வார இறுதியில் ஹேப்பி நியூர் படத்தின் வசூல் 108.86 கோடியை தாண்டி விட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இப்படம் இந்தியில் 104.10 கோடியையும், தெலுங்கில் 2.92 கோடியையும், தமிழில் 1.84 கோடியையும் வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு முன் ஹிருத்திக் ரோஷனின் பேங் பேங் படமும், சல்மான் கானின் கிக் படமும் தான் ரிலீசான ஒரே வாரத்திலேயே 100 கோடி வசூலை எட்டி உள்ளனவாம். அந்த வரிசையில் தற்போது ஹேப்பி நியூ இயரும் இணைந்துள்ளது.