Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள்!

27 அக், 2014 - 08:07 IST
எழுத்தின் அளவு:

ரஜினி-கமலுக்கு பிறகு அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய்-அஜீத்துக்குத்தான் தற்போது ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். அவர்களில் விஜய் அடிக்கடி ரசிகர்களை சந்திப்பது. நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்று தனது மன்றங்களை பெரிய அளவில் வளர்த்து வைத்திருக்கிறார். அதோடு, தனது பட விழாக்கள் சென்னையில் நடைபெறும்போதும் அவர்களை வரவைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வருகிறார்.

இதனால் நாளுக்கு நாள் விஜய்க்கான ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில், அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கத்தி படத்துக்கும் தமிழகமெங்கிலும் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து வரும் விஜய் ரசிகர்கள், இதுவரை தியேட்டர் வளாகங்களில் போஸ்டர், கட்அவுட் என்று வைத்து வந்தவர்கள், இப்போது சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் விஜய்க்கு மெழுகால் ஆன சிலை வைத்து பரபரப்பு கூட்டியுள்ளனர். இந்த சிலையின் மதிப்பு ரூ.1.5 லட்சமாம்.


அந்த சிலை நேற்று காலை திறந்து வைக்கப்பட்டது.அப்போது அந்த சிலையை நிறுவிய பேஸ்புக் விஜய் பேன்ஸ் கிளப் ரசிகர்கள் அந்த சிலையுடன் நின்று வணங்குவது போலவும், முத்தம் கொடுப்பது போலவும் விதவிதமான போட்டோக்களை எடுத்துக்கொண்டதோடு, அந்த போட்டோக்களை இணையதளங்களிலும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி விட்டனர். இந்த சேதியறிந்து ஏராளமான ரசிகர்கள் அந்த தியேட்டருக்கு வந்து விஜய்யின் சிலையை பார்த்த வண்ணம் உள்ளனர்.


சில மாதங்களுக்கு முன்பு விஜய்யின் தீவிர ரசிகர்களான இரண்டு சிற்பிகள் விஜய்க்கு கல்லிலேயே சிலை வடித்தனர். அது விஜய்க்கு தெரிவிக்கப்பட்டபோது அவரது தந்தை எஸ்.ஏ.சி அந்த சிற்பிகளை நேரில் சந்தித்து அந்த சிலையை பார்த்து விட்டு வந்தார் என்பது குறிப்பித்தக்கது. அதையடுத்து இப்போது இன்னொரு அழகான சிலையை விஜய்யின் சென்னை ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர்.


ஆக தமிழகத்தின் தற்போதைய இளவட்ட ஹீரோக்களில் சிலை வைக்கப்பட்ட முதல் நடிகராகியிருக்கிறார் விஜய்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in