ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கத்தி படம் பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வெற்றி என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் படத்தின் ரீமேக் விஷயங்களுக்கான பேச்சு வார்த்தை இப்போதே ஆரம்பமாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். இந்தப் படத்திற்கான முதல் நாள் வசூல், இதுவரை காணாத ஒன்று என்று உலகம் முழுவதும் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்னிந்திய திரையுலகத்தின் வசூல் சாதனையில் இந்தப் படம் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் திரையுலகினர் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இன்றுடன் முடியும் இந்த வார கலெக்ஷனிலேயே இந்தப் படம் படத்திற்கான அசல் செலவைத் தொட்டு விடும், இனி வரும் நாட்களில் வரும் கலெக்ஷன் படத்தின் லாபத்தில் சேரும் என்றும் சொல்கிறார்கள்.
இதனிடையே, கத்தி படத்தை தெலுங்கில் ரீமேக் செய்வதற்கான ஆயத்த வேலைகள் ஆரம்பமாகிவிட்டதாம். இந்தப் படத்தை டப்பிங் செய்து வெளியிடுவதை விட முன்னணி ஹீரோவை நடிக்க வைத்து ரீமேக் செய்து வெளியிட்டால் மிகப் பெரிய வசூலைக் குவிக்கலாம் என்றும் தெலுங்குத் தயாரிப்பாளர்கள் கருதுகிறார்களாம். கத்தி படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்கியிருக்கும் தயாரிப்பாளரே படத்தை தெலுங்கிலும் நேரடியாக தயாரிக்க முடிவு செய்துள்ளார் என்றும் சொல்கிறார்கள். இந்தப் படத்தில் பவன் கல்யாண் நடித்தால் அவருக்கிருக்கும் இமேஜில் படம் மிகப் பெரும் வெற்றி பெறும் என்றும் கருதும் தயாரிப்பாளர்கள் இது சம்பந்தமாக அவரை அணுகியிருக்கிறார்கள் என்றும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது சம்பந்தமான அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.