Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்ரேயாவின் சீக்ரெட் இதுதானாம்...

25 அக், 2014 - 15:52 IST
எழுத்தின் அளவு:

நடிகை ஸ்ரேயாவை தமிழ்த் திரையுலகம் மறந்து விட்டாலும், தெலுங்குத் திரையுலகம் அவரை மறக்காமல் 'மனம்' படம் மூலம் மீண்டும் ஒரு மறுவாழ்வைக் கொடுத்திருக்கிறது. 'எனக்கு 20 உனக்கு 18' படத்தில் அறிமுகமானாலும் ஜெயம் ரவி நடித்த 'மழை' படம் மூலம்தான் யார் இவர் என தன்னைப் பற்றிப் பேச வைத்தார். அழகான தோற்றத்தாலும், கிளாமரான நடிப்பாலும் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் அப்படியே இயக்குனர் ஷங்கரையும் கவர்ந்தார். அதன் பலனாக ரஜினிகாந்த் நடித்த 'சிவாஜி' படத்திலும் நாயகியாக நடித்து நடிப்பிலும், நடனத்திலும் அந்தப் படத்தில் அசத்தியிருந்தார். ரஜினியுடன் நடித்த பின்னும் அவரால் தமிழ்த் திரையுலகில் முன்னணி நாயகியாக இடம் பிடிக்க முடியவில்லை.

விஜய் நடித்த 'அழகிய தமிழ் மகன்,' விஷால் நடித்த 'தோரணை', தனுஷ் நடித்த 'திருவிளையாடல் ஆரம்பம்', விக்ரம் நடித்த 'கந்தசாமி' உட்பட பல படங்களில் நாயகியாக நடித்தவர், வடிவேலு நடித்த 'இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியதைத் தொடர்ந்து நமது நாயகர்களும், இயக்குனர்களும் அவரை கைகழுவி விட்டனர். அதன் பின் அவரால் தமிழ்த் திரையுலகில் பெரிதாக ஜொலிக்கவே முடியவில்லை. இருந்தாலும் மனம் தளராமல் முயற்சிகளை மேற் கொண்ட ஸ்ரேயாவுக்கு சில மாதங்களுக்கு முன் வெளிவந்த 'மனம்' படம் தெலுங்கில் மீண்டும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.


நடிக்க வந்து 13 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் அதே ஒல்லியான தோற்றத்துடனும், பொலிவான அழகுடனும் ஸ்ரேயா இருப்பதற்கு என்ன காரணம் என்பதை அவரே தெரிவித்திருக்கிறார். தினமும் பவர் யோகா, நடனப் பயிற்சி ஆகியவற்றை செய்யத் தவறவே மாட்டராம். அதோடு சாப்பிடுவதையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வாராம். அதனால்தான் அன்று முதல் இன்று வரை ஒரே மாதிரி இருக்கிறேன் எனச் சொல்லியிருக்கிறார். தற்போது 'கோபாலா கோபாலா' என்ற ஒரே ஒரு தெலுங்குப் படத்தில் மட்டுமே நடித்து வரும் ஸ்ரேயாவுக்கு தமிழ்த் திரையுலகம் மீண்டும் கதவைத் திறக்குமா...?


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in