ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படம் குறித்து புதிய தகவல் இதோ! |
சமீபத்தில் நடிகை தியா மிர்ஷாவுக்கு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில், தியா மிர்ஷா தனது தந்தையாக பாவித்து வரும் நடிகர் போமன் இரானி பங்கேற்கவில்லை. இதனால் அவர் மீது தியா மிர்ஷா அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் இதனை மறுத்துள்ளார் தியா. இதுகுறித்து தியா மிர்சா கூறியுள்ளதாவது, போமன் இரானி எனது அப்பாவை போன்றவர். எனது திருமணத்திற்கு அவர் வராதது மனதளவில் என்னை பாதித்தது. ஒருவர் மீது நாம் அதிகமாக பாசம் வைத்து அவர்கள் திருமணத்திற்கு வரவில்லை என்றால் அதை நம்மை வருத்தப்பட வைக்கும். இது இயல்பான ஒன்று தான். ஆனால் இதை வைத்து எங்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது போன்று செய்திகள் வெளிவருகின்றன. இது முற்றிலும் தவறான செய்தி. எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. நான் இப்போதும் ஒரு அப்பாவாக அவர் மீது உண்மையான அன்பு வைத்திருக்கிறேன், அவரும் ஒரு மகளாக என்மீது அன்பு வைத்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.