கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
3-இடியட்ஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு, அமீர்கானும், இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியும் இணைந்துள்ள படம் பி.கே. இப்படத்தில் அமீர்கான் ஜோடியாக அனுஷ்கா சர்மா நடித்துள்ளார். முக்கிய ரோலில் சஞ்சய் தத் நடித்து இருக்கிறார். இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது, டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. டிசம்பர் 19ம் தேதி படம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள சஞ்சய் தத் சிறையில் இருப்பதால், அவருக்காக ஸ்பெஷலாக பிகே படத்தை திரையிட்டு காட்ட இருக்கிறார்கள். இதுகுறித்து அமீர்கான் கூறுகையில், சஞ்சய் தத்திற்கு பி.கே., படத்தை திரையிட்டு காட்ட சிறை அதிகாரிகளிடம் முறைப்படி அனுமதி கேட்டுள்ளோம். அவர்கள் அனுமதி கொடுத்தவுடன் சஞ்சய் தத்திற்கு ஸ்பெஷலாக பிகே படத்தை திரையிடுவோம் என்று கூறியுள்ளார்.