கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
கதாநாயக நடிகர்கள் ஒருவர் மீது ஒருவர் பொறாமையுடன் இருந்த காலம் மாறிப்போய், கடந்த சில வருடங்களாக, இளைய தலைமுறை நடிகர்கள் மத்தியில் நல்ல நட்பு நிலவி வருகிறது. ஒருவர் நடித்த படத்தை மற்றவர் பார்ப்பதும், அந்தப் படத்தைப் பற்றி பாசிட்டிவ்வான தகவல்களை தங்களின் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூவலைத்தளத்தில் பகிர்ந்து கொள்வதும் அடிக்கடி நடக்கிறது.
கத்தி படத்துக்கும் இப்படி பாசிட்டிவ்வான பப்ளிசிட்டி கிடைத்திருக்கிறது. தீபாவளியன்று வெளியான விஜய்யின் 'கத்தி' திரைப்படம், விஜய் ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது மட்டுமல்ல திரைப்படத்தறையை சேர்ந்தவர்களையும் கவர்ந்திருக்கிறது. தற்போது வெளியான அனைத்து தியேட்டர்காளிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'கத்தி'க்கு பல 'விஐபி'க்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்த பட்டியலில் நடிகர் தனுஷும் ஒருவர். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கத்திக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ''சூப்பர் படம் 'கத்தி', தரமான ஒரு படமாக அமைந்துள்ளது, சந்தோஷமாக இருக்கிறது. விஜய் சார், ஏ.ஆர்.முருகதாஸ் சார், என் ராக்ஸ்டார் அனிருத் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்'' என்று ட்வீட் செய்துள்ளார்.
அனிருத்தினால் கத்தி படத்துக்கு கிடைத்த அனுகூலமா இது?