தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெனாலிராமன் படத்திற்கு பிறகு வடிவேலு நடிக்கும் படம் எலி. தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜ்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். இந்த படத்தின் கதை 1970களில் நடப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. வடிவேலு சி.ஐ.டியாக நடிக்கிறார். நாட்டில் ஒரு பெரிய விஷயம் நடக்கிறது. அதை போலீஸ், அரசாங்கம், அதிகாரிகள் கண்டுபிடிக்க போராடுகிறார்கள். ஆனால் ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தில் சி.ஐ.டியாக இருக்கும் வடிவேலு அந்த விஷயத்தை எலி மாதிரி சந்து பொந்துக்குள் புகுந்து கண்டுபிடிப்பதை காமெடியாக சொல்லும் படம். ஏற்கெனவே சீனாதான என்ற படத்தில் வடிவேலு சி.ஐ.டியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. எலி படத்திற்கு பிறகு நான்கு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.