இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கோலிவுட் நடிகர்களில் அஜீத் ரசிகர் யார் என்றால், சட்டென்று சிம்பு என்றுதான் சொல்வார்கள். அந்த அளவுக்கு அஜீத் புகழ் பாடி வரும் சிம்பு, அவுட்டோர்களில் தான் இருந்தாலும் அவர் படங்களை ரிலீஸ் ஆன அன்றைக்கு ரசிகர்களோடு ரசிகராக அமர்ந்து விசில் அடித்து பார்த்து ரசிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அதோடு, அஜீத்தோடு இன்னும் இணைந்து நடிக்காத அவர் அதற்கான சந்தர்ப்பத்தையும எதிர்நோக்கியிருக்கிறார்.
ஆனால் சிம்புவை முந்திக்கொண்டு அஜீத் நடித்த ஆரம்பம் படத்தில் நடித்தார் ஆர்யா. இந்த நிலையில், தற்போது விஷ்ணுவர்தன் இயக்கி வரும் யட்சன் படத்தில் அஜீத் ரசிகராக நடிக்கிறாராம் ஆர்யா. இதுவரை ஆர்யாவுக்கு யட்சன் படத்தில் வித்தியாசமான வேடம் என்று மட்டுமே சொல்லி வந்த விஷ்ணுவர்தன் இப்போதுதான் அந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே அஜீத் நடித்த பில்லா, ஆரம்பம் படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன். அதனால் அவர் மீது கொண்ட அபிமானத்தினால் இந்த படத்தில் ஆர்யாவை அஜீத்தின் ரசிகராக நடிக்க வைத்திருக்கிறாராம். மேலும், பெயரளவில் அஜீத் ரசிகன் என்று சொல்லிக்கொள்ளும் வேடத்தில் ஆர்யா நடித்திருக்கிறாரா? இல்லை வெறித்தனமான அஜீத் ரசிகரா? என்பது பற்றி எதுவும் தெரிவிக்காத அவர், இந்த படம் அஜீத்தின் ரசிகர்களை குஷிபடுத்தும் வகையில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.