'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தனது பிகே படத்தின் ரிலீஸ் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் அமீர்கான், இந்த படத்தை கிறிஸ்துமசிற்கு வெளியிட உள்ளாராம். இவரது முந்தைய படங்களான தேரி ஜமீன் பர், கஜினி, 3 இடியட்ஸ் ஆகிய படங்களையும் கிறிஸ்துமஸ் அன்று தான் வெளியிட்டுள்ளார். கிறிஸ்துமஸ் அன்று படத்தை ரிலீஸ் செய்வதால் அவைகள் சூப்பர் ஹிட் ஆகும் என்ற சென்டிமென்ட்டை வைத்துள்ளார் அமீர்கான்.
இதே போன்று தீபாவளிக்கு வெளியிடுவதால் தனது படங்கள் ஹிட் அடிப்பதாக ஷாருக்கானும், ரம்ஜானுக்கு வெளியிடுவதா சல்மான் கானும் சென்ட்டிமென்ட்டாக வைத்துள்ளனர். இந்த ஆண்டு ஷாருக்கானின் ஹேப்பி நியூ இயர் படத்துடன் சேர்த்து அமீர்கானின் பிகே படத்தின் டிரைலரையும் நேற்று வெளியிட்டுள்ளனர்.
இது பற்றி அமீர்கான் கூறுகையில், இது எதிர்பாராமல் நடந்துள்ளது. நானும் ஷாருக்கானும் ஒரே நேரத்தில் மோத வேண்டும் என்றுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக நான் எனது படங்களை கிறிஸ்துமஸ் அன்று தான் வெளியிட்டு வருகிறேன். ஷாருக்கான் அதிகம் எதிர்பார்க்கும் அவரது படத்துடன் எனது படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ஷாருக்கானின் புகழால் எனக்கு லாபம் தான். அவரது படத்துடன் சேர்த்து எனது படத்தின் டிரைலர் வெளியிடப்படுவதால் எனது படமும் புகழ்பெற்று, கண்டிப்பாக லாபத்தை எனக்கு பெற்றுத் தரும் என்றார்.