Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூர்யாவின் டெரர் கெட்டப்!

24 அக், 2014 - 08:18 IST
எழுத்தின் அளவு:

படத்துக்குப் படம் ஏதாவது வித்தியாசம் காட்ட வேண்டும் என்ற தேடல் உடையவர் தான் சூர்யா. இருப்பினும் சிங்கம், சிங்கம்-2 , அஞ்சான் மாதிரியான ஆக்சன் மசாலாப் படங்களில் சமீபகாலமாக அவர் சிக்கிக்கொண்டு வருகிறார். இந்த நிலையில், அஞ்சான் அதிர்ச்சி தோல்விக்குப்பிறகு வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

இந்த படம் இதுவரை சூர்யா நடிக்காத வகையில் ஹரர் கதையில் உருவாகிறது. அதேபோல் சென்னை 28, சரோஜா, மங்காத்தா போன்ற படங்களை இயக்கிய வெங்கட்பிரபுவுக்கும் அந்த ஹரர் படம் புதிய அனுபவம்தான். இவரையும் பிரியாணி கவிழ்த்து விட்டதால் இந்த முறை ஹிட் கொடுத்தாக வேண்டிய கட்டாயம். அதனால் முன்பு மாதிரி ஓவர் பில்டப் எதுவும் கொடுக்காமல் சத்தமில்லாமல் இந்த படத்தை இயக்கிக்கொண்டு வருகிறார்.


முக்கியமாக ஐ படத்தில் விக்ரமின் கெட்டப்பைப் பார்த்து அசந்து போன நடிகர்களில் ஒருவரான சூர்யா, இனிமேல் படத்துக்குப்படம் ஏதாவது புதுமையான கெட்டப்பில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார். அதனால் அவரது முயற்சிக்கு கைகொடுக்கும் வகையில் இந்த படத்தில் ஒரு டெரர் போன்ற கெட்டப்பில் அவரை நடிக்க வைத்து வருகிறார் வெங்கட்பிரபு. இந்த கெட்டப்பை தீபாவளி தினத்தன்று வெளியிட்டுள்ளனர்.


அந்த கெட்டப், சேது, பிதாமகன் படங்களில் பார்த்த விக்ரமை போன்று ஒரு டெரர் கெட்டப்பில் காட்சி கொடுக்கிறார் சூர்யா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in