'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
பாலிவுட் நடிகையான தியா மிர்சாவுக்கு கடந்த அக்., 18ம் தேதி சாகீல் சங்காவுடன் திருமணம் நடந்தது. தியா மிர்சாவுக்கு திருமணம் உற்சாகத்தை தந்தாலும் மற்றொரு பக்கம் அவருக்கு வருத்தத்தையும் தந்துள்ளது. தியாவின் வருத்தத்திற்கு காரணமானவர் நடிகர் போமன் இரானி.
போமன் இரானியும், தியா மிர்சாவும், ''லகே ரகோ முன்னாபாய்'' மற்றும் ''ஹம் தம் அவுர் கோஸ்ட்'' படங்களில் நடித்துள்ளனர். அப்போது முதலே இருவரும் அப்பா-மகளாக பழகி வருகின்றனர். தியாவை கிட்டத்தட்ட தனது வளர்ப்பு மகளாக பாவித்தார் போமன், அதேப்போல், தியாவும், போமனை தனது வளர்ப்பு அப்பா போன்றே பாவித்தார். ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து தனது திருமணத்தை போமன் நடத்தி வைப்பார் என்று ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறியிருந்த தியா, அதன்படி திருமணத்தன்று போமன் வருவார், அப்பா ஸ்தானத்தில் இருந்து தனது திருமணத்தை நடத்தி வைப்பார் என்று அதிகமாக எதிர்பார்த்திருந்தார் தியா. ஆனால் போமனால் திருமணத்திற்கு வர முடியவில்லை. இதனால் அவர் மீது மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார் தியா.
ஷாரூக்கானின், ''ஹேப்பி நியூ இயர்'' படத்தில் போமனும் முக்கிய ரோலில் நடித்துள்ளார். அதுதொடர்பான புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்ததால் அவரால் தியாவின் திருமணத்தில் பங்கேற்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.