இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகை இலியானா தனது காதலனான ஆண்ட்ருவை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார். தமிழில் வெற்றி கிடைக்காத இலியானாவுக்கு, தெலுங்கு, இந்தி மொழிகளில் வெற்றி கிடைத்தது. தற்போது தெலுங்கில் வாய்ப்பில்லாததால் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் இப்போது சைப் அலிகான் உடன் ஹேப்பி எண்டிங் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், அவர் அளித்துள்ள பேட்டியில், இரண்டு பேர் காலமுழுக்க ஒன்றாக சேர்ந்து வாழ்வது என்பது இயலாத காரியம் என்று முன்பு நினைத்தேன். உள்ளத்தில் இருந்து வருவது தான் காதல், அதனால் அது சாத்தியம் தான் என இப்போது எனது எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். திருமணம் என்பது ஒரு சிறப்பான விஷயம் என்றவரிடம் உங்களது திருமணம் எப்போது என கேட்க, விரைவில் அதை வெளிப்படையாக சொல்வேன் என்றார்.
இலியானாவின் பேச்சு, அவருக்கு திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசையை மறைமுகமாக காட்டுகிறது. அதனால் அவர் விரைவில் தனது காதலரான ஆண்ட்ரூவை திருமணம் செய்வதை அறிவிப்பார் என தெரிகிறது.