'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
அடுத்த மாதம் 20ந் தேதி முதல் பனாஜியில், இந்தியன் பனோரமா என்று அழைக்கப்படும் மிகப்பெரிய இந்திய திரைப்பட விழா நடக்க இருக்கிறது. இந்த விழாவில் திரையிடுவதற்காக 7 மலையாள படங்கள் தேர்வாகி இருக்கிறது. ஜீது ஜோசப் இயக்கிய த்ரிஷ்யம் (தற்போது பாபநாசம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகிறது. கமல் நடிக்கிறார்), அப்ரித் ஷென் இயக்கிய 1983, அனில் ராதாகிருஷ்ணன் மோகன் இயக்கிய நார்த் 24 காத்தம், ராஜீவ் ரவி இயக்கிய நிஜன் ஸ்டீவ் லோப்ஸ், வேணு இயக்கிய முன்னையிருப்பு, ஷாஜி என்.கருண்ஸ் இயக்கிய ஸ்வப்னம், ரஞ்சித் இயக்கிய நிஜன் ஆகிய படங்கள் தேர்வாகி உள்ளது.
மலையாளத்தை போலவே 7 மராட்டிய படங்களும், தேர்வாகி உள்ளது. 5 பெங்காலி படங்களும், இரண்டு இந்தி படங்களும், அசாமி, கன்னடம், காஜி, ஒரியா, தமிழ் மொழியிலிருந்து தலா ஒரு படங்களும் தேர்வாகி உள்ளது. தமிழில் தேர்வாகி உள்ள படம் குற்றம் கடிதல்.