தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஏற்கனவே 25 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்த ஹன்சிகா, தனது கடந்த பிறந்த நாளின்போது மேலும் 5 குழந்தைகளை தத்தெடுத்தார். அதோடு முதியோர்களின மருத்துவ செலவுக்காகவும் உதவி அளித்து வருகிறார். அந்த வகையில் தான் சினிமாவில் நடித்து சம்பாதிப்பதில் பாதி தொகையை சமூக சேவையிலேயே செலவிட்டு விடுகிறார் ஹன்சிகா.
அதோடு, தனது ஒவ்வொரு பிறந்த நாளையும் தத்தெடுத்துள்ள குழந்தைகளுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி மகிழும் ஹன்சிகா, தீபாவளி பண்டிகையையும் வருடந்தோறும் அவர்களுடன்தான் கொண்டாடி வருகிறார். அதனால் இந்த வருடமும் தீபாவளியை அவர்களுடன் கொண்டாட ஆம்பள படப்பிடிப்பில் இருந்து மும்பை பறந்துள்ளார் ஹன்சிகா.
முன்னதாக, ஏற்கனவே காஷ்மீர் வெள்ள நிவாரண நிதி வழங்கிய ஹன்சிகா, கடந்த 19ந்தேதி ஆந்திர வெள்ள நிவாரண நிதிக்காக ஐதாராபாத்தில் நடைபெற்ற ஒரு கலை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சில பாடல்களுக்கு கலக்கல் நடமும் ஆடினாராம். ஆக, சினிமாவில் நடிப்பது போக மீதமுள்ள பெரும்பாலான நேரத்தை இப்படி சமூக சேவையில்தான் கழித்து வருகிறார் ஹன்சிகா.