ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஒரே நாளில் லிங்கா படத்தின் டப்பிங்கை பேசி முடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். கோச்சடையான் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்து வரும் படம் லிங்கா. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் இப்படத்தில், ரஜினி ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்தது. இன்னும் ஒரு பாடல் மட்டுமே பாக்கி உள்ளது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடந்து வரும் நிலையில், டப்பிங் பணிகள் நடக்கிறது. இதில் படத்தில் தான் பேச வேண்டிய அனைத்து டப்பிங்கை ஒரேநாளில் பேசி முடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்திவிட்டார் ரஜினி. லிங்கா படம் ரஜினி பிறந்தநாள் அன்று அல்லது பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.