Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

1200 திரையரங்குகளில் பூஜை...?

20 அக், 2014 - 13:43 IST
எழுத்தின் அளவு:

தீபாவளிக்குத் திரைக்கு வரும் படங்களில் பலரும் 'கத்தி' படத்தைப் பற்றி மட்டுமே பேசி வருகிறார்கள். அதே தினத்தில் வெளிவரும் 'பூஜை' படத்தைப் பற்றிய பேச்சு குறைவாகவே இருக்கிறது. விஜய்க்கு இருக்கும் லட்சக் கணக்கான ரசிகர்களே அதற்குக் காரணம். சமூக வலைத்தளங்களில் கூட 'கத்தி' படத்தைப் பற்றித்தான் நல்ல விதமாகவோ, கெட்ட விதமாகவோ கமெண்ட்டுகள் அடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், 'பூஜை' படத்தைப் பற்றி யாருமே கண்டுகொள்ளவில்லை. இருந்தாலும் 'பூஜை' படம் 'கத்தி'க்கு சிறிதும் குறைவில்லாமல் அமைதியாக ஒரு சாதனையைப் படைத்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மற்ற மாநிலங்கள், உலகம் முழுவதும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளதாம்.

தமிழ் நாட்டில் மட்டும் சுமார் 400 திரையரங்குகள், தெலுங்கில் சுமார் 500 திரையரங்குகள், கேரளா, கர்நாடகா மற்றும் உலகமெங்கும் வெளியாகும் திரையரங்குகளைக் கணக்கில் கொண்டால் 1200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னணி கமர்ஷியல் இயக்குனரான ஹரி, தெலுங்கில் முன்னணி ஹீரோயினான ஸ்ருதிஹாசன் ஆகியோர் இருப்பதால் தெலுங்கிலும் படத்திற்கு நல்ல வியாபாரம் நடந்துள்ளதாம். அதோடு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து சமீபத்தில் வெளியாகிய 'கோவிந்துடு அந்தாரிவாடிலே' படமும் நல்ல வெற்றி பெற்று அவருக்கு மீண்டும் ஒரு ஹிட்டைக் கொடுத்துள்ளதாலும், 'பூஜை' படம் தெலுங்கில் தமிழை விட அதிக திரையரங்குகளில் வெளியாகிறது என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


'பூஜை' படத்துடன் தமிழில் 'கத்தி' படமும், தெலுங்கில் 'கார்த்திகேயா' என்ற படமும் மட்டுமே போட்டியாக வெளியாகிறது. 'கத்திக்கும், கார்த்திகேயாவுக்கும்' வெற்றி பெற 'பூஜை' தேவைப்படுகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in