மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ரோஜா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட மதுபாலா, அதன் பிறகு இந்தியில் டாப் ஹீரோயின் ஆனார். திருமணமாகி செட்டிலாகிவிட்ட பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் வாய்மூடி பேசுவோம் படத்தில் நடித்தார். தற்போது கன்னடத்தில் நடிக்கிறார். தெலுங்கில் ஹிட்டான அத்தரிண்டிக்கி தேரேதி கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. கோபக்கார அத்தைக்கும், குறும்புக்கார மருமகனுக்கும் இடையே நடக்கிற கோல்ட் வார்தான் கதை. தெலுங்கில் நதியா அத்தையாக நடித்திருந்தார். அதே கேரக்டரில் கன்னடத்தில் மதுபாலா நடிக்கிறார். பவன் கல்யாண் நடித்த மருமகன் கேரக்டரில் சுதீப் நடிக்கிறார். தெலுங்கில் ஹீரோயின் சமந்தா. கன்னடத்தில் த்ரிஷா நடிக்கலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. பத்து வருடங்களுக்கு முன்பு மதுபாலா, அனன்யா, டைம் பாம் என்ற இரு கன்னடப் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.