அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பாலிவுட்டின் அழகு மற்றும் திறமையான நடிகை கஜோல். முன்னணி நடிகையாக விளங்கிய கஜால், நடிகர் அஜய் தேவ்கானை திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவிற்கு முழுக்கு போட்டார். இந்நிலையில் அவர் மீண்டும் திரைக்கு வருகிறார். ராம் மாதவானி இயக்கும் புதிய படத்தின் மூலம் தான் கஜோல் ரீ-ஆன்ட்ரி ஆக இருந்தார். ஆனால் டெலிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில், கஜோல் பங்கேற்க இருப்பதால் அவரால் இந்தப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. இருந்தாலும் இப்போது மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தின் ரீ-மேக்கில் கஜோல் நடிக்க இருக்கிறார். மலையாள சினிமாவில் ரீ-என்ட்ரி ஆன நடிகை மஞ்சு வாரியருக்கு ஹிட்டாக அமைந்த படம் ஹவ் ஓல்டு ஆர் யூ. இப்போது இந்தப்படத்தை இந்தியில் ரீ-மேக் செய்யும் உரிமையை அஜய் தேவ்கான் வாங்க இருக்கிறார். அதில் தனது மனைவியையே நடிக்க வைத்து, மீண்டும் அவருக்கு வெள்ளித்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்க எண்ணியிருக்கிறார். இந்தப்படம் பற்றி அஜய், விரைவில் அறிவிப்பார் என தெரிகிறது.