பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கமலஹாசனின் இளையமகள் அக்ஷரா ஹாசன் சமிதாப் என்ற இந்திப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார். அமிதாப் பச்சன், தனுஷ், ரேகா நடிக்கிறார்கள். பால்கி இயக்குகிறார், இளையராஜா இசை அமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தில் தங்கை அக்ஷரா ஹாசனுக்காக அக்கா ஸ்ருதி ஹாசன் ஒரு பாடல் பாடுகிறார். இளையராஜா இசையில் அவர் ஹிந்துஸ்தானி பாடல் ஒன்றை பாடுகிறார். ஸ்ருதி முறைப்படி ஹிந்துஸ்தானி இசை கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு ஸ்ருதி ஹாசன் சோனாக்ஷி சின்ஹாவுக்காக தீவார் படத்தில் ரொமாண்டிக் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். ஸ்ருதி பாடும் இரண்டாவது இந்திப் பாடல் இது.