ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடிக்கும் லிங்கா படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. புறநகர் பகுதியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு ரஜினி, சோனாக்ஷி சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த செட் 5 மாடி உயரம் கொண்டது. இதனை சுதர்சன் என்ற ஊழியர் மேற்பார்வை செய்து வந்தார். பாடல் காட்சி எடுக்க செட் தயாராக இருக்கிறதா என்பதை கண்காணிக்க வந்தவர் தவறி 5 மாடி உயரத்திலிருந்து கீழே விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளதால் சில மாதங்கள் நடக்க முடியாது மற்றபடி உயிருக்கு எதுவும் ஆபத்தில்லை என்று டாக்டர்கள் கூறினர். தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.