ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
துள்ளுவதோ இளமை படத்தில் தனது இயக்குனர் பயணத்தை தொடங்கியவர் செல்வராகவன். அந்த படத்தில்தான் அவரது தம்பியான தனுசும் ஹீரோவாக நடித்து அறிமுகமானார். முதல் படமே செக்ஸ் சம்பந்தப்பட்ட கதை என்பதால், அண்ணனும், தம்பியும் சேர்ந்து செக்ஸ் படம் எடுத்திருக்கிறார்கள் என்று அந்த சமயத்தில் கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்தது.
ஆனால் அதையடுத்து காதல் கொண்டேன் என்ற படத்தை இயக்கி அந்த முத்திரையை உடைத்து விட்டு வெளியே வந்தனர். பின்னர், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களை இயக்கிய செல்வராகவன், கடைசியாக ஆர்யா-அனுஷ்காவை இணைத்து இரண்டாம் உலகம் என்ற படத்தை இயக்கியிருந்தார்.
அப்படி அவர் இயக்கியதில் 7ஜி ரெயின்போ காலனியை தவிர எந்த படமும் ஓடவில்லை. அதிலும் இண்டாம் உலகம் பெரிய அதிர்ச்சி தோல்வியை கொடுத்தது. அதனால் தனது ஹிட் படங்களில் தன்னுடன் இருந்த யுவன் ஷங்கர் ராஜாவுடன் மீண்டும் கூட்டணி அமைத்திருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார் செல்வராகவன்.
மேலும், இந்த முறை ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் அவர், பல மாதங்களுக்குப்பிறகு இப்போதுதான் ஸ்கிரிப்ட் ஒர்க்கை முடித்துள்ளார். அதோடு, இந்த படத்தில் எனது செண்டிமென்ட் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் என்னுடன் இணைந்திருப்பதால் ஏற்கனவே கொடுத்தது போன்று இப்போதும் எங்கள் கூட்டணி வெற்றிக்கூட்டணியாக அமையும் என்று தான் நம்புவதாகவும் கூறியுள்ளார் செல்வராகவன்.