Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹீரோக்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் ஸ்ரீதிவ்யா!

19 அக், 2014 - 09:13 IST
எழுத்தின் அளவு:

சிவகார்த்திகேயனுடன் ஸ்ரீதிவ்யா நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அவர்களது கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது. அதனால்தான் இப்போது காக்கி சட்டை படத்திலும் அவர்களை ஜோடி சேர்த்துள்ளனர். அதோடு முந்தைய படத்தை விட இந்த படத்தில் இன்னும் கூடுதல் நெருக்கம் காட்டியும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல், ஜி.வி.பிரகாஷ்குமாரின் முதல் படமான பென்சில் படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா, தற்போது டார்லிங் என்ற படத்திலும் அவருடன் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கு காரணமும், பென்சில் படத்தில் அவர்களுக்கிடையிலான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட் ஆனதுதானாம். மேலும், ஜி.வி.பிரகாசுக்கு பென்சில் முதல் படம் என்பதால், அவர் அதிக கூச்சமாக இருப்பார் என்று படப்பிடிப்பு தளத்தில் அவருடன் அதிக நேரத்தை செலவிட்டு நட்பை வளர்த்துக் கொண்டாராம் ஸ்ரீதிவ்யா.


அதனால்தான், முதலில் அவரை தொட்டு நடிக்கவே பயந்து பயந்து நின்ற ஜி.வி.பிரகாஷ் பின்னர் இயல்பாக நடிக்கத் தொடங்கினாராம். அதோடு, அவர் சில காட்சிகளில் நடிக்க அதிக டேக் வாங்கினாலும் தானும் அவருடன் சேர்ந்து சளைக்காமல் மீண்டும் மீண்டும் நடித்துக் கொடுத்தாராம் ஸ்ரீதிவ்யா. அவர் கொடுத்த அந்த ஒத்துழைப்பு காரணமாகத்தான் மீண்டும் டார்லிங் படத்திற்கும் அவரை புக் பண்ணியிருக்கிறார்களாம்.


இவர் மட்டுமின்றி தன்னுடன் எந்த ஹீரோக்கள் நடித்தாலும் தற்போது ஒத்துழைப்பு கொடுத்து நடிப்பதில் முதல் ஆளாக இருக்கிறாராம் ஸ்ரீதிவ்யா. அதனால்தான் விஷ்ணுவுடன் ஜீவா படத்தில் நடித்த அவரை மீண்டும் இன்னொரு படத்திலும் அவருடன் ஜோடி சேர்க்கும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in