இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
தனது 23 வயதிலேயே 30 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருபவர் ஹன்சிகா. இந்தி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவரை பின்னர் கதாநாயகியாக பாலிவுட் சினிமா அங்கீகரிக்கவில்லை. ஆனால் தென்னிந்திய சினிமா அவரை கதாநாயகியாக தத்தெடுத்துக் கொண்டது. அதனால் தமிழ், தெலுங்கில் பிசியான நடிகையாக இருக்கிறார் ஹன்சிகா.
தமன்னா, அனுஷ்கா, காஜல்அகர்வால் போன்ற நடிகைகள் பிசியாக இருந்தபோது என்ட்ரியான ஹன்சிகா, ஆரம்பத்தில் நடித்த படங்கள் ஹிட்டடிக்காத போதும் இளவட்ட ரசிகர்களை அவரது அழகு தாக்கியதால் வேகமாக வளர்ந்தார். இடையினில் சிம்புவின் காதலில் விழுந்து கொஞ்சம் சறுக்கினாலும் தற்போது அதிரடியாக படங்களை கைப்பற்றி மீண்டும் நம்பர்-ஒன்னாகி விட்டார்.
மேலும், அரண்மனை படத்துக்கு பிறகு மீகாமன், ரோமியோ ஜூலியட், ஆம்பள, வாலு, இதயம் முரளி, விஜய்யின் புதிய படம் என அரை டஜன் படங்களில் தற்போது நடித்து வரும் ஹன்சிகா, மற்ற நடிகைகளைப் போன்று தனது படக்கூலியை படத்துக்குப்படம் உயர்த்த வில்லையாம். இப்போதுவரை ஒன்னே கால் கோடி வரைதான் வாங்குகிறாராம். அதேசமயம், சில வேண்டப்பட்ட நிறுவனங்கள் என்றால் 1 கோடி கொடுத்தாலும் மறுபேச்சு பேசாமல் வாங்கிக் கொள்கிறாராம்.
அதனால் படங்களே இல்லாத காஜல் அகர்வால், தமன்னா போன்ற நடிகைகள்கூட 2 கோடி, 3 கோடி என்ற சம்பளத்தை உயர்த்திக்கொண்டு செல்லும் நிலையில், படு பிசியாக நடித்து வரும் ஹன்சிகா கொடுக்கிற சம்பளத்தை வாங்கிக்கொள்கிறார். இந்த நல்ல மனசு யாருக்கும் வராது என்று சில தயாரிப்பாளர்கள் ஹன்சிகாவின் புகழ் பாடுகிறார்கள்.