விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா |
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், அமீர்கான் நடித்து வரும் படம் பி.கே. இப்படத்தின் முதல்போஸ்டர் வெளியானபோது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமீர்கான் உடம்பில் ஒரு பிட்டு துணி கூட இல்லாமல், டிரான்சிஸ்டரை கொண்டு முனபக்கத்தை மறைத்து போஸ் கொடுத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஒருவர் வழக்கு கூட தொடர்ந்தார். ஆனால் அதற்கு அடுத்து வெளியான போஸ்டர்கள் எல்லாம் ஆபாசமின்றி வெளிவந்தன.
இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் அனுஷ்கா சர்மா இருதினங்களுக்கு முன்னர், நானும் அமீர்கானை போன்று டிரான்சிஸ்டரும் போஸ் தர இருக்கிறேன் என்று கூறினார். அனுஷ்காவின் இந்த பேச்சு பெரும் பரபரப்பானது, காரணம் ஒருவேளை அவரும், அமீர்கான் போன்று ஏதாவது சர்ச்சையை கிளப்பும் வகையில் போஸ் கொடுக்க போகிறாரோ என்ற பேச்சுக்கள் எல்லாம் எழுந்த நிலையில், தற்போது பிகே படத்தின் 4வது போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில், அனுஷ்கா சொன்னபடியே கையில் டிரான்சிஸ்டரும் போஸ் கொடுத்துள்ளார். ஆனால் அமீர்கான் போல உடம்பில் பிட்டு துணி கூட இல்லாமல் போஸ் கொடுக்கவில்லை, உடலை முழுவதுமாக மறைத்தபடி தான் போஸ்கொடுத்துள்ளார். அத்துடன் அமீர்கான் உடன் அவர் சேர்ந்துள்ள படங்களும் வெளியாகியுள்ளன. பிகே படத்தில் அனுஷ்கா, பத்திரிகையாளராக நடிப்பதாக கூறப்படுகிறது.
அமீர்கான், அனுஷ்கா சர்மா தவிர்த்து, சுசாந்த் சிங் ராஜ்பட், போமன் இரானி ஆகியோரும் நடிக்கின்றனர். சஞ்சய் தத் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் இந்தாண்டு டிசம்பர் 19ம் தேதி வெளியாக இருக்கிறது.