டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஒவ்வொரு வாரமும் அரைடஜன் படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் கல்லாப்பெட்டியை நிரப்புகிற படங்கள் ஒரு சில படங்களே..! பெரிய பட்ஜெட் படங்கள் 300 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸாகும் இன்றைய சூழ்நிலையில், ஒரு வாரம் ஓடினாலே வெற்றிப்படம், போட்ட பணத்தை எடுத்துவிடலாம் என்ற சூழல் தற்போது உள்ளது. அப்படியும் பல படங்கள் முழுசாக மூன்று நாட்கள் கூட ஓடுவதில்லை. கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 8 தமிழ்ப் படங்கள் ரிலீஸாகின. அவற்றில் சரத்குமார் நடித்த நீ நான் நிழல் என்ற படத்துக்கு முதல் காட்சிக்கே மக்கள் கூட்டம் வரவில்லை. எனவே படத்தையே கேன்சல் செய்தது நடந்தது.
இது ஒருபுறமிருக்க செப்டம்பர் 19ஆம் தேதி வெளியான அரண்மனை படம் கிட்டத்தட்ட 30 நாட்களாகிவிட்ட நிலையிலும் இன்னமும் தமிழகத்தின் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பொதுவாக, சுந்தர்.சி படங்கள் என்றாலே குடும்பம் குடும்பமாக படம் பார்க்க வருவார்கள். அரண்மனை பேய்ப்படம் என்பதால் கூட்டம் இன்னும் எகிறியது. அரண்மனை படம் குறித்து ஊடகங்களின் விமர்சனங்கள் வேறுவிதமாக இருந்தாலும், ரசிகர்களின் கூட்டம் கொஞ்சமும் குறையவில்லை.
26ஆம் தேதி வெளியான மெட்ராஸ், ஜீவா ஆகிய இரண்டு படங்களும் வெளியாகின. இவற்றில் மெட்ராஸ் இன்னமும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது 4வது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது மெட்ராஸ் படம்.
26ஆம் தேதி வெளிவந்த சுசீந்திரனின் ஜீவா படத்திற்கும் நல்ல டாக் இருந்தது. பி அண்ட் சி சென்டர்களில் வரவேற்பு இல்லை. ஏ சென்டரில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஒரு சில தியேட்டர்களில் இப்படமும் நான்காவது வாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.