பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இன்றைக்கு உலகமே சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கிறது. அதிலும் நடிகர், நடிகையர் பலரும் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தங்களை ஈடுபடுத்தி கொண்டு, தங்களது படங்கள் பற்றியும், தங்களை பற்றியும் அவ்வப்போது ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட்டின் மாஜி ஹீரோ கோவிந்தாவும் விரைவில் டுவிட்டரில் இணைய இருக்கிறார். இதனை அவர் தெரிவிக்கவில்லை.
தற்போது அவர் நடித்து வரும் கில் தில் படத்தில் கோவிந்தாவுடன் நடித்து வரும் ப்ரணீதி சோப்ரா, தன் டுவிட்டர் பக்கத்தில், கோவிந்தாவும் டுவிட்டருக்கு வருகிறார் என்று தெரிவித்துள்ளார். கோவிந்தா, தற்போது கில் தில் மற்றும் ஹேப்பி எண்டிங் படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களை புரொமோட் செய்யும் விதமாகவும், தன்னைபற்றி ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் கோவிந்தா விரைவில் டுவிட்டரில் வர இருக்கிறார்.