மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ராணி முகர்ஜி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் மர்தானி. இப்படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது, படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அடுத்தப்படியாக, ராணி முகர்ஜி, ஹசீனா பர்க்கர் வேடத்தில் நடிக்கப்போகிறார். ஹசீனா பர்க்கர், பிரபல நிழல்உலக தாதா, தாவுத் இப்ராகிமின் சகோதரி ஆவர். இவரது வாழ்க்கையை அபூர்வா லகியா படமாக இயக்க இருக்கிறார். தற்போது படத்திற்கான திரைக்கதையில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார் அபூர்வா. ஹசீனாவுடன் பலமுறை நேரத்தை செலவிட்டு அவரைபற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டு இந்தப்படத்தை இயக்குகிறார் அபூர்வா.
இதனிடையே ராணி முகர்ஜி தான், ஹசீனாவின் கேரக்டருக்கு பொருத்தமானவர் என்றும், அவர் அந்த ரோலை சரியாக செய்வார் என்றும் கூறுகிறார் அபூர்வா. இதுவரை ராணிமுகர்ஜி யாருடைய வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடிக்கவில்லை. அதனால் இந்தகதாபாத்திரத்தில் அவர் நடிக்க ஆர்வம் காட்டுவதாகவும், ஏற்கனவே இந்த ரோலில் நடிக்க அவர் தனது உடல் எடையை அதிகரிக்க தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.