600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
மாஸ் ஹீரோக்கள் என்றால் ஒரு ஓப்பனிங் பாடலோடு அவர்களுக்கு என்ட்ரி கொடுப்பது வழக்காகி விட்டது. முக்கியமாக, ரஜினி, அஜீத், விஜய், சூர்யா படங்களில் இது கட்டாயமாகி விட்டது. இதற்கு காரணம் அவர்களது ரசிகர்கள்தான். தங்களது அபிமானத்திற்குரிய ஹீரோக்களை ஆட்டம் பாட்டத்துடன் அவர்கள் வரவேற்க தயார் நிலையில் இருக்கிறார்கள். அதைப்பார்த்து தியேட்டர்களில் தாங்களும் உற்சாக முழக்கமிடுகிறார்கள்.
அந்த வகையில், தற்போது கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்தில் அவருக்கு இதுவரையில்லாத அளவுக்கு ஒரு அதிரடியான பாடலை ரெடி பண்ணியிருக்கிறார் ஹாரிஸ்ஜெயராஜ். கெளதம்மேனனின் முதல் படமான மின்னலே படத்தில்தான் ஹாரிஸ்ஜெயராஜூம் அறிமுகமானார். அதையடுத்து அவர்கள் இருவரும பல படங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள்.
ஆனால், அஜீத் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இப்போதுதான் முதன்முறையாக இசையமைக்கிறார். அதனால் இந்த படத்தில் முத்திரை பதித்து இனி அஜீத்தின் பேவரிட் இசையமைப்பாளராகி விட வேண்டும் என்று இந்த படத்துக்கு கூடுதலாக தனது உழைப்பை கொட்டியிருக்கிறார் ஹாரிஸ். அதோடு, சில வித்தியாசமான சவுண்டை வெளிப்படுத்தும் இசைக்கருவிகளை பயன்படுத்தியிருப்பவர், இதுவரை 3 பாடல்களுக்கு இசையமைத்து முடித்து விட்டவர், த்றபோது 4வது அஜீத்தின் ஓப்பனிங் பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
மேலும், அந்த பாடல் தொடங்கும் முதல் வரியில், அதர் அதர் உதர் உதர் -என்று இந்தி வார்த்தைகளுடன் எழுதப்பட்டிருக்கிறதாம். அதோடு பாடலில் பல இடங்களில் ஆங்கிலமும் கலக்கப்பட்டு ஒரு கலர்புல்லான பாடலாக அப்பாடலை உருவாக்கியிருககிறாராம் ஹாரிஸ்ஜெயராஜ்.