இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தனுஷ் என்ற சிறந்த நடிகர் தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது, இந்தியத் திரையுலகிலும் முன்னணியில் வருவதற்கு அடித்தளமாகவும், பின்னணியாகவும் அமைந்தவர் செல்வராகவன். தனது சொந்தத் தம்பியான தனுஷ் நடிக்க “காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன” போன்ற படங்களை இயக்கினார். ஒவ்வொரு படத்திலும் தனுஷை வெவ்வேறு பரிமாணங்களில் காட்டியவர். ஆனாலும், செல்வராகவன் இயக்குனராக 'ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம்' ஆகிய தோல்விப் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்தால் கொஞ்சம் அதிர்சசியடைந்துதான் போய் விட்டார்.
தனுஷோ 'ராஞ்சனா, ஷமிதாப்' என இந்தித் திரையுலகிலும் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்துவிட்டார். சினிமாவில் வெற்றி தோல்வி என்பது சகஜம்தான். அடுத்து இயக்கப் போகும் படத்தில் மீண்டும் பழைய வெற்றியைப் பெற வேண்டும் என்ற உத்வேகத்தில் செல்வராகவன் தற்போது ஒரு புதிய கதையை எழுதி முடித்துவிட்டாராம். இந்தக் கதையை அனேகமாக தனுஷே தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தனுஷ் நடிப்பாரா அல்லது வேறு யாராவது நடிப்பார்களா என்பதும் தெரியவில்லை. தன்னை இந்த அளவிற்கு வளர்த்துவிட்ட அண்ணணுக்காக தனுஷ் என்ன செய்யப் போகிறார் என்பதைத் திரையுலகம் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. 'தம்பியுடையான் படைக்கு அஞ்சான்..'...யார் யாரையோ தம்பி என சொல்லி வளர்த்து விட்டுக் கொண்டிருக்கும் தனுஷ், அண்ணணுக்கு கை கொடுக்க மாட்டாரா என்ன....?