அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் | சீதா ராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த தீபா : இனி கதையே மாறப்போகுதாம் |
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சார்மி. அவர் கதாநாயகியாக நடித்து தமிழில் டப்பான சில படங்களில் அவர் ஆடியிருந்த ஆபாச ஆட்டம் பாட்டங்கள் ரசிகர்களை சூடேத்தி விட்டது. அந்த அளவுக்கு கட்டவிழ்ந்து நின்றார் சார்மி. இருப்பினும் படத்துக்குப்படம் அவரை தோலுரிப்பது அதிகரித்துக்கொண்டே வந்ததால் ஒருகட்டத்தில் ஆந்திர ரசிகர்களுககு அவர் மீதிருந்த ஈர்ப்பானது குறைந்து விட்டது.
அதனால்தான் தற்போது குத்தாட்ட நடிகையாக அவதரித்து நிற்கிறார். கதாநாயகி என்றாலே அவரது ஆட்டம் தாங்க முடியாது, இப்போது நேரடியாகவே அயிட்டம் நடிகையாக களமிறங்கி விட்டதால் சார்மியின் குத்தாட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அங்குள்ள குத்துப்பாட்டு நடிகைகளெல்லாம் நடுங்கிப்போயிருக்கிறார்களாம். இந்த நிலையில்தான், தமிழில் விக்ரம்-சமந்தா நடித்து வரும் பத்து எண்றதுக்குள்ள என்ற படத்தில் குத்தாட்ட என்ட்ரி கொடுக்கிறார் சார்மி. அப்படி அவர் ஆடும் பாடல் காட்சி 9 நிமிடங்கள் செல்கிறதாம்.
குத்துப்பாட்டுக்கு நடனமாட தமிழ்நாட்டில் எத்தனையோ நடிகைகள் இருக்கும்போது, ஆந்திரா நடிகை சார்மியை நடனமாட வைப்பதேன்? என்று அப்பட டைரக்டரான விஜய் மில்டனை கேட்டால், சார்மி சிறப்பாக நடனமாடக்கூடியவர். சாதாரண நடன அசைவுகளாக இருந்தாலும் அவர் அதை தனது உடல்மொழியால் வெளிப்படுத்தும் விதம் அசத்தலாக இருக்கும். அப்படியே அந்த பாடல் முழுக்க ரசிகர்கள் அக்கம் பக்கம் திரும்ப விடாமல் கட்டிப்போட்டு விடும் ஆற்றல் மிக்கவர். அதன்காரணமாகத்தான் சார்மிதான் இந்த பாடலில் ஆட வேண்டும் என்று முடிவெடுத்தேன் என்கிறார்.