தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் வேலையில்லா பட்டதாரி படத்தை தயாரித்த வகையில் பல கோடி லாபம் பார்த்தது. தற்போது சிவகார்த்திகேயனை வைத்து தயாரித்து வரும் டாணா படத்தை பெரும் தொகைக்கு விற்பனை செய்வதன் மூலம், பெரிய லாபம் ஈட்ட திட்டமிட்டிருக்கிறார் தனுஷ்.. டாணா படத்தை அடுத்து விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் நானும் ரௌடிதான் என்ற படத்தைத் தயாரிக்கிறார் தனுஷ். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. சிம்பு நடித்த போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் நானும் ரௌடிதான் படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கத்தி படத்தின் ஒளிப்பதிவாளரான ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங் செய்பவர்...ஆண்டனி.
நானும் ரௌடிதான் படத்தில் துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களுக்கான தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. பிரபல நடிகர்களை நடிக்க வைத்தால் பட்ஜெட் அதிகமாகம் என்பதால், முழுக்க முழுக்க புதுமுகங்களை மட்டும் இப்படத்தில் பயன்படுத்த முடிவு செய்திருக்கிறார் தனுஷ். நடிக்க விருப்பமுள்ளவர்கள் casting.nrdthemovie@gmail.com என்ற மெயில் ஐடிக்கு போட்டோ, பயோடேட்டா ஆகியவற்றை அனுப்பினால் தன் படத்துக்கு தேவைப்பட்ட முகங்களை தனுஷ் தேர்வு செய்வாராம்.