Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெலுங்கிலும் வெற்றி பெறுவாரா விஜய்...?

17 அக், 2014 - 12:08 IST
எழுத்தின் அளவு:

தமிழ்த் திரையுலகின் அடுத்த சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் விஜய் நடித்து வெளிவரும் படங்கள் தமிழில் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. கடந்த சில வருடங்களாக கேரளாவிலும் அதிக திரையரங்குகளில் விஜய் நடிக்கும் படங்கள் வெளியாகி அங்கும் அவருக்கென தனி ரசிகர் கூட்டத்தைச் சேர்த்திருக்கிறது. தற்போது 'கத்தி' படம் இதுவரை எந்த தமிழ்ப் படமும் வெளியிடப்படாத அளவுக்கு அதிகப்படியான திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கர்நாடகாவைப் பொறுத்தவரையில் தமிழ்ப் படங்கள் அப்படியே வெளியாகி பெங்களூரு, மற்றும் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ஆனால், தெலுங்குத் திரையுலகத்தைப் பொறுத்தவரை விஜய்யால் இன்னும் சரியான ஒரு வெற்றியைப் பெற முடியாமலே இருக்கிறது. இதற்கு முன் அவர் நடித்து டப்பிங் செய்யப்பட்ட 'துப்பாக்கி, நண்பன்' ஆகிய படங்கள் கூட பெரிய வரவேற்பைப் பெறவில்லை. சூர்யா, கார்த்தி, விஷால், விக்ரம் ஆகியோர் படங்கள் கூட நல்ல வெற்றியைப் பெறும் நிலையில் ஆக்ஷனில் அவர்களது படங்களை விட விஜய்யின் படங்கள் தெலுங்குப் படங்களைப் போலவே அதிரடியாக இருக்கும். இருந்தாலும் தெலுங்கு ரசிகர்கள் இன்னும் விஜய் படங்களுக்கு நல்ல வெற்றியைக் கொடுக்காமலே இருக்கிறார்கள்.


'கத்தி' படமும் அதே பெயரில் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது. இந்த முறை படத்திற்கு நல்ல விளம்பரத்தைக் கொடுத்து தெலுங்கிலும் வெற்றி பெறும் முனைப்புடன் இருக்கிறார்களாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in