விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
பாலிவுட்டின் ஹாட் அண்ட் செக்ஸி நடிகையான தீபிகா படுகோனே, பராகான் இயக்கத்தில், ஷாரூக்கான் ஜோடியாக, ''ஹேப்பி நியூ இயர்'' படத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்., 24ம் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் புரொமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பாலிவுட் படங்களில் மட்டுமே நடித்து வரும் தீபிகா ஏற்கனவே தனக்கு ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆர்வமில்லை என்று கூறிவிட்டார். அதேசமயம் பிரான்ஸ் மற்றும் ஈரானிய படங்களில் தனக்கு நடிக்க ஆசை என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து தீபிகா கூறியுள்ளதாவது, இந்திய சினிமாவை போன்று பிரான்ஸ் நாட்டு சினிமாவும் மிகவும் அழகானது. நல்ல கதையும், என்னை ஆச்சர்யப்படுத்தும் வகையிலான கதைகள் அமையும் பட்சத்தில், நான் பிரான்ஸ் படத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன். பிரான்ஸ் நாட்டு படங்களில் என்னை மகிவும் கவர்ந்தது ''பிரைஸ்லைஸ்'' படம் தான். அதேப்போல் நான் ஈரானிய படங்கள் சிலவற்றையும் பார்த்துள்ளேன். அந்தநாட்டு இயக்குநர்களின் படங்களில் நடிக்க ஆசை, அதேப்போல் சில குறிப்பிட்ட இயக்குநர்களின் படங்களில் பணியாற்ற ஆசை உள்ளது என்று கூறியுள்ளார்.