ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சல்மான் கானின் வளர்ப்பு தாயான ஹெலனுக்கும், நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் அவ்வளவு இணக்கமான உறவு கிடையாது. கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நடிகர் சல்மான் கானும், ஐஸ்வர்யா ராயும் காதலித்து வந்தனர். ஆனால் ஒருக்கட்டத்தில் அவர்கள் தங்களது காதலை முறித்து கொண்டனர். அப்போது சல்மான் மற்றும் அவரது தாய் உள்ளிட்ட குடும்பத்தாருடன், ஐஸ்வர்யாவுக்கு இருந்த உறவு இடைவெளியை ஏற்படுத்தி விட்டது. பின்னர் ஐஸ்வர்யா ராய், நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஆராத்யா என்ற 3வயது மகள் உள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் தொடங்கிய மும்பை திரைப்பட விழாவில் ஹெலனும், ஐஸ்வர்யா ராய்யும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். இது விழாவிற்கு வந்த அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.