தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த ஆண்டில் பாலிவுட்டில் வசூலை அளிக்க குவித்தது தீபிகா நடித்த படங்கள் தான். இந்த ஆண்டும் அவர் நடித்த ஃபைண்டிங் ஃபன்னி படமும் ஹிட் அடித்துள்ளது. தொடர்ந்து, பெரிய பட்ஜெட்டில் அவர் நடித்திருக்கும் ஹேப்பி நியூ இயர் படமும் ரிலீசிற்கு முன்பே பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதுடன், படத்தின் பாடல்களும் இப்போதே வெற்றி பெற்று விட்டன.
இப்படி ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்த நடிகையான தீபிகாவிற்கு பாலிவுட்டில் மவுசு பலமடங்கு அதிகரித்து உள்ளது. இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு நடிகரும், இயக்குனரும் தீபிகாவுடன் படம் பண்ணவே ஆசைப்படுகிறார்களாம். சமீபத்தில் மீடியாக்களை சந்தித்த அவரிடம், நீண்ட காலமாக உங்களுடன் நடிக்காத எந்த நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்க நீங்கள் விரும்புகிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சிறிதும் யோசிக்காமல், ஹிருத்திக் ரோஷன் என தீபிகாவும் பதிலளித்துள்ளார்.
ஹிருத்திக்கும்-தீபிகாவும் இணைந்து நடித்து வெகு காலம் ஆகி விட்டாலும், சமீபத்தில் அவர்கள் இருவரும் இணைந்து படம் பார்க்க சென்றதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அது அத்தனையும் வதந்திகள் என பின்னர் தெரிய வந்தது. இந்நிலையில் தற்போது தீபிகாவே வாய்திறந்து ஹிருத்திக்குடன் நடிக்க விரும்புவதாக கூறி விட்டதால் வெகு விரைவிலேயே இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் சந்தர்ப்பம் ஏற்படும் என்று நம்பலாம்.