ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
''கிக்'' படத்தின் வெற்றிக்கு பிறகு சல்மான் கான், சூரஜ் பார்ஜாத்யா இயக்கும், ''பிரேம் ரத்தன் தன் பயோ'' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சல்மான் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இதில் ஒரு சல்மான், ராஜாவீட்டு இளவரசரான விஜய் என்ற கதாபாத்திரத்திலும், மற்றொருவர் சராசரி மனிதராகவும் நடிக்கிறார். இளவரசர் சல்மான் ஜோடியாக சோனம் கபூர் நடிக்கிறார். இவர்கள் தவிர்த்து நீல் நிதின் முகேஷ், அர்மான் ஹோலி, அனுபம் கெர், ஸ்வரா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், இப்படத்தின் முதல் ஸ்டில் வெளியாகியுள்ளது. அதில் சல்மான், இளவரசர் போன்ற தோற்றத்திலான படங்கள் வெளியாகியுள்ளன. இப்படம் அடுத்தாண்டு ரிலீஸாக இருக்கிறது.